தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக நேற்று செங்கோட்டையன் இபிஸ்க்கு எதிராக திரும்பி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பத்து நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கட்சி பதவியிலிருந்து நீக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் கட்சிப்பதவியை பறித்து இபிஎஸ் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்தியபாமா, ஐடி பிரிவு செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 100 பேர் தங்களையும் கட்சி பதவியிலிருந்து நீக்கும்படி இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…