நிஷா முதல் மிக்ஜாம் வரை.. இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்னென்ன தெரியுமா..??

By Begam

Published on:

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடல்களில் புயல்கள் உருவாவதும், அது கடற்கரையை ஒட்டியுள்ள மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துவதும் இயற்கையின் நிகழ்வு. அதுபோல தற்போது மிக்ஜாம்  புயல் சென்னையில் தற்பொழுது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது இப்புயலால் சென்னை மக்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.  இதைப்போல தமிழ்நாட்டின் இதற்கு முன்னதாக தாக்கிய புயல்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

2005 – பியார், பாஸ், ஃபர்னூஸ்  புயல்கள்:

   

இப்புயல்கள் வங்கக் கடலில் உருவாகின. இதில் டிசம்பர் மாதம் உருவான ஃபர்னூஸ் புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

2008 – நிஷா புயல்:

2008-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி வங்கக் கடலில் நிஷா புயல் உருவானது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான மிகப்பெரிய புயலால், 20நாட்களுக்கு மேல் கனமழை பெய்தது. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 170-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

2010 – ஜல் புயல்:

2010-ம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் பக்கம் நகர்ந்து, நவம்பர் 6-ம் தேதி 111 கி.மீ வேகத்தில் சென்னையைக் கடந்து சென்றது. இந்தப் புயலின் தாக்கத்தினால் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2011 – தானே புயல்:

2011 டிசம்பர் மாதம் தானே புயல் புதுச்சேரி – கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கடலூர் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

2012 நீலம் புயல்:

2012-ம் ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி வங்கக்கடலில் நீலம் உருவானது. பல இடங்களில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. 20-க்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  பெருமளவு உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.

2013 – மடி புயல்:

2013ம் ஆண்டு டிசம்பரில் மடி புயல் உருவானது. வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

2016 – வர்தா புயல்:

அதி தீவிர புயலான வர்தா சென்னை பழவேற்காடு அருகே கடந்து சென்றது. 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தலைநகர் சென்னையை பெரிதும் பாதித்தது.

2017 – ஒக்கி புயல்:

2017ல் வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ஒக்கி புயல்,மிகஜாம் மிகஜாம்  கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  இலங்கையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர்.

2018 – கஜா புயல்:

இப்புயலால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையே முடக்கி போட்டது.

2019- ஃபனி புயல்:

தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

2020 -நிவர் புயல்:

2020 ல் நவம்பரில் வங்கக்கடலில் உருவான இந்த புயலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

2023-மிக்ஜாம் புயல்:

தற்பொழுது இந்த புயலின் கோர தாண்டவத்தால் சென்னையே உருக்குலைந்து போயிருக்கிறது. இதன் பாதிப்புகள் குறித்த விவரங்கள் இனிதான் வெளியாகும்.