என்னப்பா சொல்லறீங்க.. Fortune Oil விளம்பரத்துல நடிச்ச இந்த பொண்ணு இப்போ ஹாலிவுட் படத்துல ஹீரோயினா.. வைரலாகும் புகைப்படம்..

By Begam on ஜனவரி 19, 2024

Spread the love

திரை உலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் குழந்தை நட்சத்திரங்களாக கால் பதித்தவர்கள் தான். குழந்தை நட்சத்திரமாக தங்களது திரைப்பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பலர் இன்று திரையுலகில் கலக்கி வருகின்றனர். குறிப்பாக ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடித்த எஸ்தர் அணில்,  ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் போன்ற பல்வேறு இளம் நடிகைகள் இதற்கு உதாரணமாக கூறலாம்.

   

இவர்களைப் போலவே, 2017 ல் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரமோச்சவம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக  திரையுலகில் கால் பதித்தவர் தான்  நடிகை அவந்திகா.  இதைத்தொடர்ந்து இவர் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் உடன் மனமந்தா, நடிகர் நாகசைதன்யா உடன் பிரேமம் போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

   

 

இது மட்டும் இன்றி தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பூமிகா படத்தில் இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் மட்டுமின்றி, விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதன்படி இவர் நடித்த Fortune Oil விளம்பரத்தை நாம் தற்பொழுதும் மறந்திருக்க மாட்டோம். இந்த விளம்பரத்தின் மூலம் இவர் மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . குழந்தை நட்சத்திரமாக பார்த்த இவர் தற்பொழுது வளர்ந்து இளம்மங்கையாக மாறியுள்ளார்.

தற்பொழுது ஹாலிவுட் படங்கள், வெப் சீரியஸ்கள் என நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சமந்தா ஜெய்னே இயக்கத்தில் தற்பொழுது ரிலீசான ‘மீன் கேர்ள்ஸ்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   தற்பொழுது இவரின் ரீசன்ட் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ‘oil விளம்பரத்தில் சின்ன பெண்ணாக பார்த்துவரா இவர்? இப்படி ஹாட் & செக்ஸியாக மாறிவிட்டாரே’ என்று கூறி,  இவரது insta பக்கத்தை தேடி பாலோ செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனால்  தற்பொழுது இவர் இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார் .

 

View this post on Instagram

 

A post shared by avantika (@avantika)