பீகார், பூர்னியா மாவட்டத்தில் கஸ்பா பகுதியில் உள்ள கரிக் கோசி என்ற ஆற்றிற்கு 5 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய போது 9 வயது சிறுமி ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி தத்தளித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை காப்பாற்ற முயன்றனர். சிறுமியோடு சேர்ந்து காப்பாற்ற முயன்ற 4 பேர் உட்பட ஐவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் கலோச்சனா தேவி (30), கௌரி குமாரி (9), சேகர் குமார் (21), கரண்குமார் (21), சச்சின் குமார் (18) என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் அருகே இருந்த மக்களின் உதவியுடன் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என மாவட்ட மாஜீஸ் திரேட் அன்சுல் குமார் கூறியுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்பு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பீகார் மந்திரி லேசி சிங் உயிரிழந்தோர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்..
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…