அடக்கடவுளே… ஆற்றில் தவறி விழுந்த சிறுமி… காப்பாற்ற முயன்று 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்…!

By Divyamayakannan on ஆவணி 24, 2025

Spread the love

பீகார், பூர்னியா மாவட்டத்தில் கஸ்பா பகுதியில் உள்ள கரிக் கோசி என்ற ஆற்றிற்கு 5 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய போது 9 வயது சிறுமி ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி தத்தளித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை காப்பாற்ற முயன்றனர். சிறுமியோடு சேர்ந்து காப்பாற்ற முயன்ற 4 பேர் உட்பட ஐவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் கலோச்சனா தேவி (30), கௌரி குமாரி (9), சேகர் குமார் (21), கரண்குமார் (21), சச்சின் குமார் (18) என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் அருகே இருந்த மக்களின் உதவியுடன் உடல்களை மீட்டுப்  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என மாவட்ட மாஜீஸ் திரேட் அன்சுல் குமார் கூறியுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின்பு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பீகார் மந்திரி லேசி சிங் உயிரிழந்தோர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்..