கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த காதலன்… திடீரென ஏற்பட்ட தகராறு… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

By Divyamayakannan on ஆவணி 24, 2025

Spread the love

கேரளா, இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ள பொன்னம் தடி பகுதியை சேர்ந்தவர் சிவலோஷ் (28). தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேலாண்மை படித்து வருகிறார். தொடுபுழா அருகே வாழைக்குளம் பகுதியில் கல்லூரி இருப்பதனால் சிவலோசுவின் குடும்பத்தினர் வாடகை வீடு எடுத்து வாழைக்குளத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். அடிமாலியை அடுத்து பாறைத்தோடு பகுதியை சேர்ந்த மீனாட்சி (20) என்பவர் ஆசிரியர் பயிற்சிக்காக வாழைக்குளம்  பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்தநிலையில்  சிவலோசுவுக்கும் மீனாட்சிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுக்  காதலித்து வந்துள்ளனர் ‌. நேற்று முன்தினம் சிவலோசின் குடும்பத்தினர் வெளியே சென்று இருந்ததால் வீட்டில் சிவலோஷ் தனிமையாக இருந்துள்ளார்.

அதனால் சிவலோசுவுக்கு அவரது நண்பர் பலமுறை போன் செய்தும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின்  முன்பக்க கதவு திறந்து இருந்ததால்  உள்ளே சென்று பார்த்தபோது சிவலோஷ் மின்விசிறியில் தூக்கியில்  பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர், அருகில் இருந்த அறையை எட்டிப் பார்த்தபோது மீனாட்சி துணியால் கழுத்தை நெறித்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார் . இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

   

தகவலின் பேரில்  சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டு இருந்து வந்துள்ளார். அதன் பேரில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் இருவரும் தனிமையில் இருந்தப்  போது ஏற்பட்ட தகராறில் சிவலோஷ், மீனாட்சியை  துணியால் கழுத்தை நெரித்துக்  கொலைச்  செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்  கொண்டார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.