திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் மகனும் தான் உதயநிதி ஸ்டாலின். இவர் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களை தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து பிரபலமானார். தயாரிப்பாளராக வெற்றி நடை போட்ட உதயநிதி ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கழகத் தலைவன் மற்றும் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய உதயநிதி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் பிறகு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் துணை முதல்வர் பதவியும் இவருக்கு வழங்கப்பட்டது.
இப்படியான நிலையில் சினிமா மற்றும் அரசியலில் சாதித்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக மற்றும் பாஜக என மாறிமாறி திமுக மீது உதயநிதி மீது ஊழல் புகார்களை கூறிவரும் நிலையில் உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற பேச்சு எழுந்துள்ளது. அதன்படி 2021 தேர்தலில் ECI இல் அவர் அளித்த பிரமாண பத்திரத்தில் ரேஞ்ச் ரோவர் கார், 1600 கிராம் தங்கம், வங்கி இருப்பு என மொத்தம் 4.89 கோடியும், இன்சூரன்ஸ் பாலிசிகள், பாண்டுகள், பங்குகள் என மொத்தம் 21.13 கோடியும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…