“என் உயிருக்கு ஆபத்து… சொத்துக்காக பழிவாங்குகிறார்…!” – நடிகர் சரவணன் மீது முதல் மனைவி போலீசில் பகீர் புகார்…!

Spread the love

‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சரவணன் மீது, அவரது முதல் மனைவி சூர்யாஸ்ரீ சென்னை மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை சரவணன் ஆட்களை வைத்து அகற்றியதாகவும், தனக்கும் தனது சொத்துக்களுக்கும் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் சரவணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சரவணன் தனது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளித்ததுடன், முதல் மனைவிக்கு எதிராக எதிர் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியே சம்மதம் தெரிவித்திருந்ததாகக் கூறினார். தற்போது தன்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்திலேயே அவர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் சரவணன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனக்குத்தான் தனது முதல் மனைவி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள நடிகர் சரவணன், அமைதியாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், 12 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்துவிட்டு இப்போது திடீரென புகார் அளிப்பதன் பின்னணியை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது, மவுலிவாக்கம் காவல்துறையினர் இருதரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்டு, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

3 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

3 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

3 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

4 மணத்தியாலங்கள் ago