Connect with us

CINEMA

தமிழ் சினிமாவில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

1950 ஆம் ஆண்டு ஜப்பானிய திரை மேதை அகிரா குரசோவா இயக்கத்தில் உருவான ராஷோமான் திரைப்படம் உலகளவில் சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் சினிமா எடுப்பவர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பலரும் அந்த கதை சொல்லும் பாணியில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என ஆசை கொண்டனர். இந்த படத்துக்கு பிறகு ராஷோமான் எபக்ட் என்ற சொல்லே சினிமாவில் உருவாகியது.

இந்த படத்தின் தாக்கத்தால் பலரும் தங்கள் படத்தின் திரைக்கதையை ராஷொமான் வடிவில் மாற்றி உருவாக்கினர். அதில் பல படங்கள் வெற்றி பெற்று இன்றளவும் கல்ட் கிளாசிக் ஆக கொண்டாடப்படுகிறது. தமிழில் கூட விருமாண்டி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய திரைப்படங்கள் இந்த பாணியில் உருவானவைதான்.

   

ஆனால் ராஷோமான் வெளியாகி நான்கே ஆண்டுகளில் அதன் பாதிப்பில் தமிழில் ஒரு சினிமா உருவானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் 1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரி பாய் ஆகியோர் நடிப்பில் எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில், ஏ வி எம் நிறுவனம் தயாரித்த ‘அந்தநாள்’ திரைப்படம்தான் அது.

படத்தின் தொடக்கத்திலேயே கதாநாயகன் பாத்திரம் இறந்துவிட அவரைக் கொலை செய்தது யார் என போலீஸ் துப்பறிகிறது. அவரை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு தெரிந்த கோணத்தில் அவர் கொலைப் பற்றி கூறுகிறார்கள். இறுதியில் யார் கொலை செய்தது என்ற அதிர்ச்சிகரமான முடிவோடு படம் முடிகிறது. விறுவிறுப்பான இந்த படத்தில் பாடல்கள் தேவையில்லை என்பதால் பாடல்கள் இன்றியே படத்தை இயக்கியுள்ளார் எஸ் பாலச்சந்தர். இத்தனைக்கும் அப்போது படங்களில் 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும்.

இவ்வளவு புதுமைகள் இருந்தும் அப்போது இந்த திரைக்கதைக்கும் நம் ரசிகர்கள் பழக்கப்பட்டிருக்காததாலும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக்காக இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

Continue Reading

More in CINEMA

To Top