சென்னை எழும்பூர் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் காவலர் சத்யா (28), எழும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், தனியார் நிறுவன பொறியாளரான இவரது கணவர் விஜய்க்கும் (30) கடந்த 2024-ம் ஆண்டு திருமணமாகி, ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் வேலைக்குச் சென்று வந்த நிலையில், குழந்தையைப் பராமரிப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த மாதம் 27-ஆம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சத்யா, வீட்டின் அறையைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். கணவர் விஜய் அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி சத்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே பெண் காவலர் உயிரிழந்துள்ளதால், இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…