கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

Spread the love

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலை செய்து வந்த இவர், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வேலைக்குச் சென்ற இடத்தில் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் ஜீவானந்தம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனிடையே, அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள இரு வீடுகளின் மாடியில் இருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளில் 3 மூட்டைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் சுமார் 7 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. உடலின் மீது பச்சை குத்தப்பட்டிருந்த பெயர்களை வைத்து, அது மாயமான தங்கமணியின் உடல் என்பதைப் பள்ளப்பட்டி காவல்துறையினர் உறுதி செய்தனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில், தங்கமணியுடன் வேலை பார்த்த நந்தினி (28) மற்றும் அவரது நண்பர்களான மாலிக் பாஷா (30), சிவராமன் (28) ஆகியோர் இந்தச் கொடூரத்தைச் செய்தது தெரியவந்தது. நந்தினியும் மாலிக் பாஷாவும் பழகியதில் ஏற்பட்ட கடனை அடைக்க, தங்கமணி அணிந்திருந்த 3 சவரன் நகையைக் கேட்டுக் தகராறு செய்துள்ளனர். அவர் தர மறுத்ததால் அடித்துக் கொன்று, உடலை 7 துண்டுகளாக வெட்டி மூட்டைகளில் கட்டித் தண்ணீர் தொட்டிகளில் வீசியுள்ளனர். நகைகளை விற்று பணத்தைப் பகிர்ந்து கொண்ட இந்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

3 மணத்தியாலங்கள் ago