தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைமை ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வார்டு வாரியாகக் கணக்கெடுத்துப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் தவெக நிர்வாகிகள் மேயர் பதவிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் உடன் இருக்கும் நிலையில், தவெகவினருக்குக் கேட்கும் இடங்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை 3 முதல் 5 மேயர் பதவிகளைக் கோர அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக காரைக்குடி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மதுரையில் கட்சியின் செல்வாக்கை மேலும் உயர்த்த மேயர் பதவி அவசியம் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருதுவதால், அதைத் தன் வசப்படுத்தத் தீவிர காய்நகர்த்தல்களைச் செய்து வருகிறார்.
அதேவேளையில், தவெக தரப்பில் மதுரை மேயர் பதவியைக் கைப்பற்ற பலத்த போட்டி நிலவுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி மாவட்டச் செயலாளரான மருது பாண்டியனை மேயர் வேட்பாளராக முன்னிறுத்த தவெகவின் முக்கியப் புள்ளியான சிடிஆர் நிர்மல்குமார் விரும்புகிறார். சட்டமன்றத் தேர்தலின் போது திருப்பரங்குன்றம் தொகுதியைத் தனக்காக விட்டுக்கொடுத்ததால், அதற்கு ஈடாக மருது பாண்டியனுக்கு மதுரை மேயர் பதவியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் நிர்மல்குமார் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக அரசில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் பொறுப்பில் இருக்கும் நிலையில், மதுரையில் மேயர் பதவியை தவெக விட்டுக் கொடுக்குமா அல்லது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்குமா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக மற்றும் காங்கிரஸ் இடையே உருவாகியுள்ள இந்த மேயர் பதவிக்கான போட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…