2 மாசத்துல அடுத்தடுத்து விழுந்த 2 பிணங்கள்.. ஒரு குடும்பத்தையே அழித்த அந்த 4 பேர்… ஆட்டோ டிரைவர் தற்கொலையில் அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (44), கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 15 வயது மகள் தர்ஷினியை இழந்த சோகத்தில் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த தர்ஷினி, கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி, நித்தின்குமார், இலக்கியா மற்றும் செங்குட்டுவன் ஆகியோரே தற்கொலைக்குக் காரணம் என்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து செங்குட்டுவனைத் தவிர அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக வெளியில் சுற்றித் திரிந்த செங்குட்டுவன், உயிரிழந்த தர்ஷினியின் தந்தை ரஜினி மற்றும் அவரது மகன் சந்தோஷிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ரஜினி புகார் அளித்தும், போலீசார் எவ்வித தகுந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சிறையில் இருந்த ரேவதி உள்ளிட்ட மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்ததோடு, அவர்களில் ஒருவருக்கு அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் பணியும் கிடைத்துள்ளது. இதனால் தங்களுக்குப் பின்னால் பெரும் பலம் இருப்பதாகக் கருதிய அவர்கள், ரஜினியின் குடும்பத்திற்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

ஜாமீனில் வெளிவந்த எதிரிகள் அடிக்கடி ரஜினியின் வீட்டிற்குச் சென்று, அவளையும் அவளது மகனையும் ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர். “உங்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது, நாங்கள் வெளியே வந்துவிட்டோம்; அடுத்த சாவு உங்களுடையதுதான்” என்று பகிரங்கமாகக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். குற்றவாளிகள் சிறைக்குச் சென்று வந்த பிறகும் தங்களை இவ்வாறு அச்சுறுத்தி, அவமானப்படுத்துகிறார்களே என்று ரஜினி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த அவர், இன்று காலை தனது மரணத்திற்கு யார் காரணம் என்பதை ஒரு வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிட்டு, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார், ரஜினியின் உடலைக் கைப்பற்றினர். ஆனால், அவர் வீடியோவில் குறிப்பிட்டிருந்த உண்மைக் குற்றவாளிகளைப் பற்றி வழக்கில் சேர்க்காமல், கணவன்-மனைவி தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே ரஜினி தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினரிடம் எழுதி வாங்க போலீசார் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மரணத்திற்கு முறையான காரணத்தைப் பதிவு செய்யக் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு மகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

7 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago