அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து திமுகவின் மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அதிமுகவில், யாரெல்லாம் எப்போது கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற அச்சத்தில் அவர் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். குறிப்பாக, அதிமுகவின் வலுவான தூண்களாகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி போன்ற முக்கியத் தலைவர்களே திமுகவில் இணைவதா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதா என்று தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
இந்த வெளியேற்றப் பட்டியலில் செங்கோட்டையன் மற்றும் அன்வர்ராஜா போன்ற மூத்த நிர்வாகிகளின் பெயர்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செங்கோட்டையன் தவெக நோக்கியும், அன்வர்ராஜா திமுக நோக்கியும் நகர வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய “தளபதிகள்” விரைவில் மாற்று முகாம்களுக்குச் செல்லவிருப்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வெளியேறக்கூடும் என்ற இந்த அதிரடித் தகவல், அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…