மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் உள்ள ‘ரொயல் ஃபுளோரா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில், பொதுவெளியில் அமைதியாக அமர்ந்திருந்த பூனை ஒன்றை முதியவர் ஒருவர் தூக்கி கீழே வீசிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் முழுவதும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமைதியாக இருந்த பூனை மீது இரக்கமின்றி இத்தகைய கொடூரச் செயலைச் செய்த நபர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கோரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பூனையின் நிலை குறித்த மேல் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…