“ஒரு போன் கால்.. மொத்தமாக சரிந்த நெட்வொர்க்…”சொகுசு காரில் வந்த பெண்களுக்கு நேர்ந்த கதி…திருச்சூரில் நடந்த நடுக்கடலோர த்ரில்லர்…!

Spread the love

கேரள மாநிலம் திருச்சூரில், பெண்களைப் பயன்படுத்தி அந்தரங்க உறுப்பில் போதைப்பொருள் கடத்திய அதிர்ச்சிப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருச்சூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அதிக மதிப்புடைய, ‘எம்.டி.எம்.ஏ’ எனப்படும் 308 கிராம் வீரியமிக்க போதைப்பொருள் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய மாதங்களில் திருச்சூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டையாக இது பார்க்கப்படுகிறது.

வாணியம்பாறை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பாலக்காட்டில் இருந்து திருச்சூர் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை மறித்துச் சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த ஒரு பெண்ணின் நடத்தையில் சந்தேகமடைந்த போலீஸார் சோதனை செய்ததில், அவர் தனது அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் முதற்கட்டமாகக் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காரில் பயணம் செய்த வித்யா, ஸ்ரீலட்சுமி ஆகிய இரு பெண்கள் மற்றும் ஷிஃபாஸ், ஜிஷ்ணு ஆகிய நான்கு பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் தங்களின் பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், முதன்மையாகக் கைது செய்யப்பட்ட ஷிஃபாஸ் என்பவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி மேலும் சில கிராம் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, சாவக்காடு பகுதியில் உள்ள ஒரு அலுமினியப் பட்டறையில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 288 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளும் ஒட்டுமொத்தமாகக் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய ஷபீர், அன்ஷாத் மற்றும் சுமேஷ் ஆகிய மேலும் மூன்று பேரையும் போலீஸார் அடுத்தடுத்துக் கைது செய்தனர். குற்றவாளிகளின் மொபைல் போன்களைக் கைப்பற்றிய போலீஸார், அதிலிருந்த அழைப்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை வைத்து இந்த ஒட்டுமொத்த போதைப்பொருள் கடத்தல் கும்பலையும் கூண்டோடு பிடித்துள்ளனர். பெண்களை கேடயமாகப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட இந்த நூதன கடத்தல் சம்பவம் கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

7 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

7 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

7 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

7 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

8 மணத்தியாலங்கள் ago