உடம்பெல்லாம் வியர்வை….! அசௌகரியமாக இருந்த பயணியை பார்த்து சுதாரித்த நடத்துனர்…. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தைச் சேர்ந்த அன்னூர் கிளையில் ஓட்டுநராக சசிகுமார் (48) மற்றும் நடத்துநராக தினேஷ்குமார் (33) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அன்னூர் – காந்திபுரம் (45 சி) வழித்தடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஆண் பயணிக்குக் கோவில்பாளையம் அருகே திடீரென அதிக வியர்வை வெளியேறுவதை நடத்துநர் தினேஷ்குமார் கவனித்தார்.

பயணி தனக்குச் சிரமம் இல்லை என்று கூறிய போதும், உடல்நலக் குறைபாடு இருப்பதை உணர்ந்த தினேஷ்குமார், உடனடியாக அவருக்குத் தண்ணீர் கொடுத்து, மருத்துவமனைக்குச் செல்ல வற்புறுத்தினார். இதனையடுத்து, ஓட்டுநர் சசிகுமாரிடம் தகவல் தெரிவித்த தினேஷ்குமார், பஸ்ஸை அங்கே இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறினார்.

குறும்பபாளையத்தில் சென்றுகொண்டிருந்த பஸ் உடனடியாகத் திருப்பப்பட்டு இரவு 7:45 மணிக்கு மருத்துவமனை வளாகத்தை அடைந்தது. அங்கு மருத்துவக் குழுவினர் பயணிக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்தனர். அப்போது பஸ்ஸில் இருந்த 19 பயணிகளும் காலதாமதம் ஏற்பட்டாலும் முழு ஒத்துழைப்பு அளித்து ஆதரவு தெரிவித்தனர்.

பயணிக்கு உதவி செய்த பின்னர், 25 நிமிடங்கள் தாமதமாகப் பஸ் காந்திபுரம் சென்றடைந்தது. மனிதநேயத்துடன் செயல்பட்ட ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் தினேஷ்குமார் ஆகிய இருவருக்கும் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Devi Ramu

Recent Posts

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

2 minutes ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

11 minutes ago

“அதுக்கு சான்ஸே இல்ல”…. டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்… அதிர்ந்த அமெரிக்கா… அடுத்து நடக்கும் திக் திக் நிமிடம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…

14 minutes ago

“தேர்தல் முடியட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி”… ஈரான் – அமெரிக்கா மோதலால் இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து…!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…

19 minutes ago

“6 கோடி மோசடி”, “வசூல் வேட்டை”…. தவெக பொதுச்செயலாளரை அதிரவைத்த இயக்குனர் பிரபு ராஜா… விஜய் கட்சிக்கு கடைசி நேரத்தில் விழுந்த செக்…!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

23 minutes ago

மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?… ஜியோவின் அடுத்த டார்கெட் இன்சூரன்ஸ் தானா?… முகேஷ் அம்பானியின் மெகா கனவு இதோ…!

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், நிதிச் சேவைத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும்…

26 minutes ago