தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை திலகம் என கொண்டாடப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் சாவித்திரியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்த நிலையில் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக தேசிய விருதும் கிடைத்தது.
தொடர்ந்து மாமன்னன், சைரன் என சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட காலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் விளம்பரப் பணிகளின் போது சென்னையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பாதுகாப்பு இங்கு இல்லை என்றும், துபாயில் பெண்களுக்கான சட்டம் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், இந்தியாவிலும் அதுபோல் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…