Connect with us

CINEMA

வெளிநாடு சென்றும் தீர்க்க முடியாத அவலம்.. விஜயகாந்துக்கு அப்படி என்ன நோய் தான் இருந்தது..? பிரபலம் சொன்ன பகீர் தகவல்கள்..

நடிகர் விஜயகாந்த் புரட்சிக்கலைஞர் என்று துவக்கத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் கேப்டன் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆனார். இறக்கும்வரை கேப்டன் என்ற பெயர்தான் அவருக்கு நிலைத்தது. ஆஜானுபாகுவான தோற்றமும், கம்பீரமான குரலும் கொண்ட விஜயகாந்த், கடைசியில் மிக மோசமான ஒரு நோயாளியாக இருந்தது, கண்கொண்டு காண முடியாத ஒரு கொடுமையாகவே அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் இருந்தது. உடல் ஆரோக்கியமும், நல்ல பலசாலியாகவும் இருந்தவர். பல படங்களில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தவர். சுவறில் ஏறி எகிறி திரும்பி உதைக்கும் ஸ்டைலில் விஜயகாந்துக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்புண்டு.

#image_title

   

 

இந்நிலையில் அவர் மிக மோசமான நிலையில், பல ஆண்டுகள் நோயாளியாக இருந்து மறைந்தது பலருக்கும் பலத்த வேதனையை தந்தது. இதுகுறித்து, டாக்டர் காந்தராஜ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, விஜயகாந்துக்கு 2 சிறுநீரகங்களும் பழுதுபட்டுவிட்டது. டயாலைசிஸ் செய்யப்பட்டது. மாற்று சிறுநீரகங்கள் வைத்தாலும் 3 முதல் 8 ஆண்டுகள்தான் அது தாக்குபிடிக்கும். மீண்டும் சிறுநீரகங்கள் பொருத்த, சிறுநீரகங்கள் கிடைக்க வேண்டும்.

#image_title

அதை பொருத்த உடல் முதுமை ஒத்துழைக்க வேண்டும். விஜயகாந்தை பொருத்தவரை மிக ஆரோக்கியமாக இருந்தவர். நன்றாக சாப்பிட்டவர். உடற்பயிற்சி செய்து நல்ல கம்பீரமான தோற்றத்தில் இருந்தவர். அவரது உணவு பழக்க வழக்கம், மரபு ரீதியான உடல் நோய்கள் போன்றவை தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு சென்றும் அவரது நோய் குணமாகவில்லை.

நிற்கவும், உட்காரவும் முடியாத நிலையில், ஜடம் மாதிரி விழுகிற விஜயகாந்தை, கோமா ஸ்டேஜில் இருக்கும் ஒருவரை கட்சி பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட செய்த கொடுமை எல்லாம் ஒரு டாக்டராக என்னால் பார்க்கவே முடியவில்லை. இதற்கு எப்படி டாக்டர்கள் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. மிகப்பெரிய கொடுமையாக அது இருந்தது. தேமுதிக கட்சி பிரமேலதாவின் தம்பி சுதீஷ் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்கிறார்கள்.

தேமுதிக கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விட, எதிர்காலத்தில் தேமுதிக என்ற கட்சி இருக்குமா என்றுதான் கேட்க வேண்டும். விஜயகாந்த் இந்த நோயால்தான் இறந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் நுரையீரல் பாதிப்பால் கெட்டுப்போய் இறந்ததாக கூறப்படுகிறது, என்று டாக்டர் காந்தராஜ் அதில் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top