“சாப்பிடும்போது இந்தத் தப்பை பண்றீங்களா?”… அப்போ உங்களுக்கு தொப்பை குறையாது…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…..!

Spread the love

இன்றைய அவசர உலகில் இளம் வயதினர் பலரையும் கவலையடையச் செய்யும் ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினை தொப்பை. முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களே இதற்கு முதன்மைக் காரணமாக அமைகின்றன. நாம் உண்ணும் உணவு உமிழ்நீருடன் சேர்ந்து நன்கு அரைக்கப்பட்டு வயிற்றுக்குள் செல்லும் போதுதான் செரிமானம் முழுமையடைகிறது. ஆனால், சாப்பிடும் முறையில் நாம் செய்யும் சில தவறுகள் தேவையற்ற கொழுப்பை அடிவயிற்றில் சேரச் செய்கின்றன.

குறிப்பாக, உணவு உண்ணும் போதோ அல்லது சாப்பிட்டு முடித்த உடனேயே அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இவ்வாறு செய்வதால், உணவைச் செரிப்பதற்காக வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மற்றும் செரிமானத் திரவங்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிமானத் திறன் குறைந்து, உண்ட உணவு சரியாகச் செரிக்காமல் தொப்பை விழ வழிவகுக்கிறது. எனவே, சாப்பிடும் போது அதிகத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது அவசியம்.

சாப்பிட்ட பிறகு குளிர்ந்த பானங்கள் (Cool Drinks) அருந்துவது தொப்பை வளர்வதை இன்னும் விரைவுபடுத்தும். இது செரிமான மண்டலத்தின் வெப்பநிலையைக் குறைத்து கொழுப்பைத் தேக்கி வைக்கிறது. அதேபோல், பசி எடுத்தும் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதும் ஆபத்தானது. பசி நேரத்தில் சுரக்கும் செரிமான அமிலங்கள் வயிற்றில் உணவு இல்லாத போது குடல் சுவர்களைப் பாதித்து நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்ற நோய்களுக்குக் காரணமாகின்றன.

ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற விரும்புவோர் உணவைச் சரியான நேரத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்குச் சற்று முன்பும், சாப்பிட்டு முடித்த பின் சிறிதளவும் தண்ணீர் குடிப்பது நல்லது. குளிர்பானங்களைத் தவிர்த்து, உணவு நன்கு செரிக்க வாய்ப்பளிப்பதன் மூலம் தொப்பை வராமல் தடுத்து உடலைத் தேக ஆரோக்கியத்துடன் பராமரிக்கலாம்.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

7 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

8 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

8 மணத்தியாலங்கள் ago