கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது. இதைக் கட்டுப்படுத்தவும், மழை வேண்டி வேண்டி முறையிடவும் கிராம மக்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி கழுதைகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தனர். ‘பஞ்ச கல்யாணி’ என்ற பழமையான நம்பிக்கையின்படி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பொழியும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும்.
இத்திருமணத்திற்காக லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதைக்கு புடவை, வளையல், பாசி, உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி மணமகள் போலவும், கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதைக்கு வேஷ்டி மற்றும் துண்டு அணிவித்து மணமகன் போலவும் அழகுற அலங்கரிக்கப்பட்டனர். பின்னர், கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் மேளதாளங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பாரம்பரிய முறைப்படி பெண் கழுதைக்கு தாலி கட்டப்பட்டு திருமணம் விமரிசையாக நடத்தப்பட்டது.
திருமணம் முடிந்ததும் மணமக்களான கழுதைகளுக்கு மறுவீடு அழைப்பு சடங்கும் நடத்தப்பட்டது. இதில் திரளாகக் கலந்துகொண்ட கிராம மக்களுக்கு திருமண விருந்தாக கம்பங்கூழ் வழங்கப்பட்டது. மழை பொழியும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் கிராம மக்கள் இந்த வினோத திருமண நிகழ்வை நடத்திக் கொண்டாடினர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.…
ஹைதராபாத்தில் உள்ள மௌலா அலி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 20 வயது இளம்பெண் அதிவேக ரயில் மோதி…
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த வழக்கமான வணிக ரீதியான பயணிகள் விமான சேவைகள் முடிவுக்கு வரவுள்ளன.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது…
திரையுலகில் பல ஆண்டுகளாக எவர்கிரீன் நாயகியாக முத்திரை பதித்து வரும் நடிகை த்ரிஷா, நடிப்பில் இருந்து ஓய்வுபெற்று தயாரிப்பில் களமிறங்க…
தனித்துப் போட்டியிடுவதையே தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில்…