#image_title
சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்தது தான். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் மூன்றாவது போட்டி நடந்தபோது அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் தனுஷ் கோட்டியன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். யார் இந்த தனுஷ் கோட்டியன் என்பதை பற்றி இனி காண்போம்.
அஸ்வின் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் தனுஷ் கோட்டியன். மெல்போர்னில் நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. அதில் தனுஷ் கோட்டியன் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. தனுஷ் கோட்டியன் மும்பையைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 26 ஆகும். தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் விளையாடி 101 விக்கெட்டுகளையும் இரண்டு சதங்களையும் 1525 ரன்களையும் குவித்து இருக்கிறார் தனுஷ் கோட்டியான்.
2023 -24 ஆம் ஆண்டில் நடைபெற்ற ராஞ்சி டிராஃபியில் சிறந்த ஆட்டக்காரருக்கான தொடர் நாயகன் விருதை தனுஷ் கோட்டியன் பெற்றிருக்கிறார். மும்பையின் 42வது ராஞ்சி டைட்டிலில் 29 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 2024 ஐபிஎல் சீசனில் ஒரே ஒரு மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். முன்னாள் ஆப் ஸ்பின்னர் ரமேஷ் பவானுக்கு பிறகு இந்திய தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மும்பை சுழற்பந்துவீச்சாளர் தனுஷ் கோட்டியன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வினுக்கு பதிலாக இடது கை சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டனான அக்சர் படேல் தான் தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்தது. அவர் தனது சொந்த காரணங்களுக்காக விடுப்பில் இருப்பதால் அந்த வாய்ப்பு தனுஷ் கோட்டியனுக்கு கிடைத்திருக்கிறது. அடுத்த நடைபெறும் போட்டியில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் எவ்வாறு விளையாடுவார் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…