Categories: சினிமா

லோகேஷ் கனகராஜூடன் இருக்கும் இந்தப் பெண் தான் அவரது மனைவியா….? உண்மையில் அவர் மனைவி யார்…? பலர் அறியாத தகவல்கள் இதோ…

Spread the love

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த லோகேஷ் கனகராஜ் கல்லூரியில் படிக்கும் போதே இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார். 2012 ஆம் ஆண்டு கார்ப்பரேட் குறும்பட போட்டியில் அச்சம் தவிர் என்ற குறும்படத்தின் மூலம் தனது கேரியரை ஆரம்பித்தார் லோகேஷ். இந்த குறும்படம் கிளோபஸ் குறும்பட விழாவில் சிறந்த இயக்குனர் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றது.

அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த அவியல் திரைப்பட தொகுப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கலாம் குறும்படமும் சேர்க்கப்பட்டது. அதன் மூலம் சினிமாவில் நுழைந்தார். 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு கைதி படத்தை இயக்கினர். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதன் மூலம் பிரபலமானார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்பட வெற்றியை தொடர்ந்து லோகேஷ் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். கைதி வெற்றிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் 2022 ஆம் ஆண்டு விக்ரம் 2023 ஆம் ஆண்டு லியோ போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த திரைப்படங்களும் வெற்றி பெற்றது.

அடுத்ததாக தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அப்படத்தின் பெயர் “BENZ”. இந்த திரைப்படத்தில் லாரன்ஸ் மாதவன் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் இந்த இளம் பெண் யார்?

லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர் அவந்திகா கனகராஜ். இவரது பெயரில் கனகராஜ் என்று வருவதால் இவர்தான் லோகேஷ் கனகராஜ் அவர்களின் மனைவி என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வர் லோகேஷ் கனகராஜன் மனைவி கிடையாது. இந்த அவந்திகா கனகராஜ் என்பவர் தளபதி விஜய்யின் மேனேஜர் ஆன ஜெகதீஷ் நடத்தும் ரூட் ஆர்டிஸ்ட் கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜன் மனைவி யார்?

கேப்டன் விஜயகாந்த் நடிப்பின் புகழின் உச்ச கட்டத்தில் இருந்தபோது ராவுத்தர் பிலிம்ஸ் என்ற ப்ரொடக்ஷனை நடத்தி வந்தார். அந்த தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தது விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் தான். இந்த ராவுத்தர் பிலிம்ஸ் ப்ரொக்ஷன் தயாரிப்பில் பல படங்களில் நடித்தார் விஜயகாந்த். அப்போது அந்த தயாரிப்பு நிறுவனத்தின் குழுமத்தில் முக்கியமான கதை கேட்கும் பொறுப்பில் இருந்தவர்தான் சௌந்தர். இந்த சௌந்தர் அவர்களின் மகளை தான் லோகேஷ் கனகராஜ் திருமணம் செய்திருக்கிறார். இவர்களது திருமணம் ஒரு அரேஞ் மேரேஜ் தான். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

5 மணத்தியாலங்கள் ago