Categories: சினிமா

ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நதியா…. என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?

Spread the love

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நேற்று அவருடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலகினர்  வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவர் ஜெயம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகம் ஆனதால் ,அந்த பட டைட்டில் அவருடன் இணைந்து ‘ஜெயம் ரவி’ என்று ஆனது.

இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் ,தீபாவளி, பேராண்மை ,தில்லாலங்கடி, ஆதி பகவன், நிமிர்ந்து நில், சகலகலா வல்லவன் போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதில் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த நதியா ‘ஹாப்பி பர்த்டே குமரன்’ என்று தனது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவு ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது .பல ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் இணைந்து நடித்த ஜெயம் ரவியையும் படத்தின் டைட்டிலையும் ஞாபகம் வைத்து நதியா இவ்வாறு அவரை வாழ்த்தி இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Begam

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

11 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

32 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

44 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

57 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

1 மணத்தியாலம் ago