தோனி, சச்சின், விராட் கோலி இல்லை…70,000 கோடி சொத்து வைத்திருக்கும் உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா…?

Spread the love

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டு. 1983 ஆம் ஆண்டு இந்தியா முதல்முறையாக உலக கோப்பையை வென்றது. அன்று ஆரம்பித்த இந்த கிரிக்கெட் மோகம் இன்றளவும் ஓயாமல் சென்று கொண்டு தான் இருக்கிறது. கிரிக்கெட்டில் அவ்வபோது பல வீரர்கள் வருவதுண்டு. ஓய்வு பெறுவதுண்டு. அதில் சச்சினில் ஆரம்பித்து கங்குலி, தோனி, விராட் கோலி போன்ற பலர் மிகவும் பிரபலமாக இருக்கிறார்கள்.

இவர்கள் கிரிக்கெட் மட்டுமல்லாது நாட்டின் மிகப்பெரிய பிராண்டுகளின் விளம்பரம் படங்களிலும் நடித்து பல வகைகளில் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி கூட இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் மற்ற நாடுகளில் எந்த கிரிக்கெட் வீரர்களும் இல்லாத அளவுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்போடு இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவரைப் பற்றி இனி காண்போம்.

70,000 கோடி ரூபாய் நிகர மதிப்புடன் உலகின் மிகவும் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை பிடித்திருப்பவர் ஆரியமான் பிர்லா. பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகனான இவர் தான் பணக்கார கிரிக்கெட்டர் ஆவார். ரியமான் பிர்லா ஒன்பது முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் அரை சதத்துடன் 414 ரன்கள் குவித்துள்ளார்.

லிஸ்ட் A கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் நான்கு போட்டிகளில் விளையாடி 36 ரன்கள் எடுத்திருக்கிறார். தொடக்கத்திலேயே பலர் கவனத்தை ஈர்த்ததால் இவரை ராஜஸ்தான் அணி வாங்கியது. இரண்டு சீசன்களில் ராஜஸ்தான் அணியில் இருந்தார். இருப்பினும் அவரால் பிளேயிங் 11 இல் இடம் பிடிக்க முயலவில்லை. அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகு சில தனிப்பட்ட காரணங்களால் கிரிக்கெட்டில் இருந்து தனது 22 ஆவது வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஆரியமான் பிர்லா.

அதற்குப் பிறகு அவரது குடும்ப பிசினஸ் ஆன பிர்லா குழுமத்துடன் இணைந்து பல பிசினஸில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இவரது தங்கை அனன்யா பில்லாவுடன் இணைந்து குடும்பத் தொழில்களை கவனித்து வருகிறார். ஆதித்யா பிர்லா மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குனர் பதவிகளை வகித்து வருகிறார் ஆர்யமான் பிர்லா. தற்போது Harvard business பள்ளியில் எம் பி ஏ பட்டத்தையும் படித்து வருகிறார் ஆர்யமான் பிர்லா.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago