குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது மற்றும் ரீல்ஸ் பார்ப்பது அவர்களின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது. சுமார் 7,000 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், Psychological Bulletin இதழில் வெளியாகியுள்ளன. இதில், மொபைல் திரையைப் பார்ப்பது உடலில் துரித உணவுகள் (Junk Food) ஏற்படுத்தும் தீமைகளுக்கு இணையாக, குழந்தைகளின் மனதிற்கும் மூளைக்கும் பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறுவயதிலேயே அதிக நேரம் மொபைலில் மூழ்கியிருக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் குறைபாடு, செயல்திறன் மழுங்குதல் மற்றும் கற்றல் திறன் பாதிப்பு போன்ற தீவிரமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த அதீத செயல்பாட்டு கோளாறுகள் குழந்தைகளின் இயல்பான சிந்தனைத் திறனைச் சிதைத்து விடுகின்றன. இதனால், மிக அவசியமான தேவையைத் தவிர, குழந்தைகளுக்குக் கைப்பேசியைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மனநல நிபுணர்கள் பெற்றோரை வலியுறுத்துகின்றனர்.
வீட்டுப்பாடங்களைச் செய்யும்போதும் அல்லது கல்வி கற்கும்போதும் குழந்தைகள் செல்போனைப் பயன்படுத்துவது அவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையைத் தடுத்து, தேடலுக்கான ஆர்வத்தைக் குறைத்துவிடுகிறது. இது ஒரு இயந்திரத்தனமான மனநிலையை உருவாக்கி, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் மந்தநிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுவதால், அவர்கள் எதிர்காலத்தில் சுயமாக முடிவெடுக்கும் திறனை இழக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், செல்போனுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டு, மற்றவர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்கும் ‘இண்ட்ரோவெர்ட்’ (Introvert) நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய தகவல் தொடர்புத் திறன் குறைபாடு (Poor Communication), எதிர்காலத்தில் அவர்கள் பணியிடங்களிலும் சமூக உறவுகளிலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாகும். எனவே, குழந்தைகளின் வருங்கால நலன் கருதிப் பெற்றோர் அவர்களின் மொபைல் பழக்கத்தை இப்போதே கட்டுப்படுத்துவது மிக அவசியமாகும்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவருக்கு விஷம் கொடுத்தும், பெட்ரோல் ஊற்றியும் உயிரோடு எரிக்க முயன்ற…
இந்திய ஊழியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பணியிடங்களில் நிலவ வேண்டிய மனிதநேயம்…
பிலிப்பின்ஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5…
பீகார் மாநிலம் முசாபர்பூரில், காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் வெளியிட்ட…
தமிழக சட்டப்பேரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் பேசும்போது, சபாநாயகர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடுத்தடுத்து குறுக்கிட்டதால் அவரால் தொடர்ந்து பேச…
தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் 23 முதல் 24 சதவீதம் வரை கமிஷன் வாங்கிய பின்னரே அடுத்த வேலைகள் நகர்ந்ததாக அமைச்சர்…