இந்திய ஊழியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பணியிடங்களில் நிலவ வேண்டிய மனிதநேயம் மற்றும் நெகிழ்வுத்தன்மை குறித்த முக்கிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சௌரப் வர்மா என்ற அந்த ஊழியர், தனது குழந்தையின் முதல் பிரீ-ஸ்கூல் நாளின் போது அலுவலகக் கூட்டத்திற்குச் சற்று தாமதமாக வந்துள்ளார். அதற்கான காரணத்தைக் கேட்டறிந்த அவரது வெளிநாட்டு மேலாளர் , அன்றைய தினம் வேலை செய்ய வேண்டாம் என்றும், கட்டாய விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தையுடன் நேரத்தைச் செலவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த மேலாளர், “இது உன்னுடைய குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள், முதல் நாள் என்பதால் குழந்தை பயத்துடனோ அல்லது பதற்றத்துடனோ இருக்கலாம்; எனவே நீ அவனுடன் இருக்க வேண்டும்” என்று கூறி அவரை லீவ் எடுக்க வைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்த சௌரப், பல இந்தியப் பணியிடங்களில் உள்ள மேலாளர்களின் அணுகுமுறையோடு இதை ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இந்திய மேலாளர்களாக இருந்தால், “குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டாய் அல்லவா, அப்புறம் என்ன? வந்து வேலையைப் பார்” என்றுதான் கூறுவார்கள் என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
https://www.instagram.com/reel/DZzBqPnyuLT/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் பலரும் தங்களின் பணியிட அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் மேலாளர்கள் ஊழியர்களின் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு இத்தகைய மனிதநேயத்தோடு நடந்துகொள்வதை பலரும் பாராட்டியுள்ளனர். அதே வேளையில், இந்தியப் பணியிடங்களில் குடும்பத்தில் அவசரக் காலங்கள் அல்லது குழந்தைகள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது கூட, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்காமல் அலுவலகத்திற்கு வரச் சொல்லி வற்புறுத்தும் மேலாளர்களின் நிஜக்கதைகளை நெட்டிசன்கள் பலரும் கவலையுடன் ஒப்பிட்டுப் பதிவிட்டு வருகின்றனர்.
பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது சீனியர் - ஜூனியர் மோதல்…
அரசு விழாக்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தமிழக அமைச்சர் கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசி…