ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற) ஒற்றைக்கண் ஜெயபாலை (66) ரவுடிகள் ஒழிப்பு தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஜெயபால் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அவரது கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள எதிர்த்தரப்பினரை பழிதீர்க்க ஒற்றைக்கண் ஜெயபால் மற்றும் அவரது ஆட்கள் சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு, ரவுடிகள் ஒழிப்பு போலீசார் ஜெயபாலைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சில ரவுடிகளுடன் ஜெயபால் தொடர்ந்து பேசி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் நேற்று அரக்கோணத்தில் வைத்து ஜெயபாலை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஜெயபாலிடம், ரவுடிகளுடனான தொடர்பு மற்றும் கொலைச் சதித் திட்டம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Nanthini

Recent Posts

இவரோட கேரியர் முடியப்போகுது.. சச்சின் டெண்டுல்கரை விட ஆபத்தான பேட்டிங் ஸ்டைல்.. சூர்யவன்ஷிக்கு எச்சரிக்கை விடுத்த டேரில் கலினன்..!!

இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான பேட்டிங் முறை, அவரது மணிக்கட்டு மற்றும் உடலமைப்பில் நீண்ட கால…

20 seconds ago

உலகப் போராக மாறுகிறதா…? பேச்சுவார்த்தை நடந்தபோதே ட்ரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… பதறும் ஈரான்…!!

லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம்,…

7 minutes ago

யோகா உடையா..? கிளாமர் ஷூட்டா..? விமர்சனத்திற்குள்ளான மகாராஷ்டிர முதல்வர் மனைவி உடை.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் யோகா உடை அணிந்து யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில்…

14 minutes ago

BREAKING: NDA கூட்டணியிலிருந்து விலகினார் ஜான் பாண்டியன்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியி இருந்து ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கடந்த சட்டமன்றத்…

16 minutes ago

பகீர்… துப்பாக்கி முனையில் கடத்தல்… 13 பேர் கொண்ட கும்பல்… பீகாரில் இரு நடனப் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!

பீகார் மாநிலம், நௌபத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடனமாடுவதற்காக இரண்டு பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.…

19 minutes ago

BREAKING: 6 MP-க்கள் கட்சியில் இருந்து விலகல்… அரசியலில் திடீர் பரபரப்பு….!

மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் 9 நாடாளுமன்ற…

27 minutes ago