தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவுக்கு ஏராளமான போட்டிகள் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை நிலை நாட்டுவதில் இபிஎஸ் கவனம் செலுத்தி வருகின்றார். அதேசமயம் கட்சியில் தனக்கு எதிராக போர் கொடி தூக்கும் நிர்வாகிகளையும் மொத்தமாக கட்சியிலிருந்து இபிஎஸ் தூக்கி வீசுகிறார். சமீபத்தில் கூட செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் ஐக்கியமான ஒன்றிய செயலாளர் பொன். சிவா மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி சிவி சண்முகம் வரவேற்றார். திமுகவில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் முன்னிலையில் இரவோடு இரவாக அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி ஓட்டுநருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஓட்டுநர் உரிமையாளரின்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஹராம்பூர் பகுதியில், மதுபானக் கடைக்கு வெளியே இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கழிவுநீர்…
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் டேவ் மக்மாஃஹான், செய்தி அறையில் தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான…
உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராமநகரின் கர்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17 திங்கள்கிழமை பட்டப்பகலில் புலி ஒன்று குடியிருப்பு…
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பொதுப்பணித் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை…
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்றும், அதை அனுமதிக்கப்போவதில்லை என்றும் மீண்டும்…