“தப்பா கேட்டுட்டீங்களே… நாளைக்கு அண்ணனை கவனிச்சிக்கோங்க”…. சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பொதுப்பணித் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சுவாரசியமான நிகழ்வு ஒன்று அரங்கேறியது. விக்கிரவாண்டி தொகுதியின் பாமக எம்.எல்.ஏ சிவக்குமார் பேசுகையில், 1952-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நந்தன் கால்வாய் திட்டத்தை’ விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், 2024-ஆம் ஆண்டு ‘ஃபெங்கல்’ புயலால் பாதிக்கப்பட்ட ஏரிகளைச் சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு 3 வயதாக இருக்கும் போது தொடங்கப்பட்ட இந்தப் பேச்சு, இன்று அவருக்கு 57 வயதாகும் வரை நீடிப்பதாகவும், விக்கிரவாண்டியைத் தனி கோட்டாட்சியாகப் பிரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் கோரிக்கைகளையும் அவையில் முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புன்னகையுடனே பதிலளித்து அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். “நீர் வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நாளைதான் நடைபெற உள்ளது. ஆனால், உறுப்பினர் சிவக்குமார் நாளைய தினம் அமைச்சர் ஆனந்திடம் கேட்க வேண்டிய நீர் பாசனம் தொடர்பான கேள்விகளை எல்லாம், இன்றே பொதுப்பணித் துறை அமைச்சரான என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். எனவே நாளை நீர் வளத் துறை விவாதத்தின் போது அண்ணனை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த எம்.எல்.ஏ சிவக்குமார், நாளைக்குத்தான் அந்த விவாதம் என்றாலும் முன்னெச்சரிக்கையாக இன்றே கோரிக்கையைப் பதிவு செய்துவிடுகிறேன் எனக் கூறியதால் அவையில் மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசுகையில், நந்தன் கால்வாய் திட்டத்திற்கு முந்தைய ஆட்சியிலேயே நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது என்றும், உறுப்பினர் சிவக்குமார் அப்போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்ததால் அவருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து எழுந்த சி.வி.சண்முகம், இத்திட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படாமல் தொடர்ந்து கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இவ்வாறு அமைசரின் நகைச்சுவையான பதிலினாலும், அதைத் தொடர்ந்து எழுந்த காட்டமான அரசியல் விவாதங்களினாலும் இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடர் களைகட்டியது.

Nanthini

Recent Posts

அடேய்… மரியாதையா கேட்டா தரமாட்டீங்களா?… உணவகத்தில் புகுந்து ஊழியர்களை… வெளுத்து வாங்கிய இளைஞர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!!

ஆகஸ்ட் 15 அன்று மாலையில் பிம்பிரி-சின்ச்வாடின் பிம்பிளே சௌதாகர் பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மூன்று இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு…

11 minutes ago

ஐயோ கொடுமையே… இங்க நிக்கவே இடமில்ல… இதுல நீ வேறயா?… ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் வெடித்த பயங்கர மோதல்… மும்பையில் அதிரவைக்கும் சம்பவம்…!

மும்பை அந்தேரியிலிருந்து விரார் நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணிடையே திடீரென காரசாரமான மோதல் ஏற்பட்டது.…

20 minutes ago

அட கடவுளே… பால் வாங்கி வந்த 75 வயது பாட்டியை… மரண பயம் காட்டிய தெருநாய்கள்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!

மும்பையின் அந்தேரி கிழக்கில் உள்ள வாஸ்து சில்ப் கூட்டுறவு வீட்டுவசதி சங்க வளாகத்தில், பால் மற்றும் பேட்டரி வாங்கிவிட்டு வீடு…

28 minutes ago

மனைவியை ஏமாற்றினால் ஆப்பு!… அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% கட்… வெளியானது அதிரடி சட்டம்…!!

அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள்…

31 minutes ago

அட கொடுமையே… கண் சிமிட்டும் நேரத்துல 70 கிராம் மாலையை காணோம்… பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்… நகைக் கடையையே நிலைகுலைய வைத்த பகீர் சம்பவம்…!

ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன்…

35 minutes ago

ஐயோ ஐயோ… யாராலயும் என்னை தடுக்க முடியாதுடா… எனக்கே ஸ்கெட்சா?…ஜேசிபியால் போலீஸ் தடுப்புகளை… நொறுக்கி எறிந்த டிரைவர்…நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி ஓட்டுநருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஓட்டுநர் உரிமையாளரின்…

47 minutes ago