“கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்கக்கூடாதா? கம்பி எண்ணும் திமுக கவுன்சிலர்… நடுவானில் பணி பெண்ணிடம் செய்த அருவருப்பான செயல்…!

Spread the love

விமானப் பணிப்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட விவகாரத்தில், திருவள்ளூர் நகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் தியாகு ஆகிய இருவரும் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விமானப் பயணத்தின் போது, அங்கு பணியில் இருந்த 25 வயதுடைய பெண் ஊழியர் ஒருவரிடம் மதுபோதையில் இருந்த பிரபாகரன் மற்றும் தியாகு இருவரும் வம்பிழுத்துள்ளனர். அந்தப் பணிப்பெண்ணை ஒருமையில் அழைத்ததுடன், அவரது ஊர் பெயரைச் சொல்லி கேலி செய்துள்ளனர். ஒருகட்டத்தில் வரம்பு மீறி, அந்தப் பணிப்பெண்ணின் தொடையில் தட்டி பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து, மற்ற பயணிகள் அவர்களைக் கண்டித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை டெல்லியிலிருந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்பிய பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் சென்னை விமான நிலையத்திலேயே வைத்து போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதி விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

CSK ஜெர்சியுடன் பிரம்மாண்ட கட்-அவுட்… விண்ணதிரும் முழக்கங்கள்… இணையத்தைக் கலக்கும் தோனி ரசிகர்களின் மிரட்டலான பாலாபிஷேக வீடியோ…!

எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…

4 minutes ago

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. திமுக சீனியர்களுக்கு காத்திருக்கும் செக்…. அதிர்ச்சியில் அறிவாலயம்… கசிந்த ‘ரகசிய அறிக்கை’…!

திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

4 minutes ago

“17 ஆண்டு காலத் திருமணம்… 1 லட்ச ரூபாய் கூலிப்படை”… கணவனின் பணத்திலேயே அரங்கேறிய கொடூரம்…. சடலத்துக்கு உடையை மாற்றி செய்த அசிங்கம்….!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…

9 minutes ago

மேட்ச் நடுவே விழுந்த புறா எச்சம், ஓடி வந்த குரங்கு… உலகமே சிரித்த சம்பவத்திற்கு ஹிமந்தா கொடுத்த மாஸ் ரிப்ளை…!

டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது…

13 minutes ago

“விஜய் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்?”…. காவல் நிலையத்திற்கு வராமல் தலைமறைவான செந்தில் பாலாஜி… பரபரக்கும் திருவல்லிக்கேணி…!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பேரம்…

15 minutes ago

விஜய்க்கு விழுந்த பலத்த அடி…. நாளைக்கு எ.வ.வேலுவையும் தவெகவில் சேர்ப்பீர்களா?…. சொந்த கட்சி வேட்பாளரே கிளப்பிய பூகம்பம்….!

திருவண்ணாமலை தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்து, "அவரை கட்சியில் இணைத்ததன்…

20 minutes ago