தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட்ட விவகாரம் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சுமார் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்ததை அடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இச்சம்பவம் தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 9 பேரை இதுவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டத்தின் பின்னணியில் கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் தொடர் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்குத் தொடர்பாக நேரில் விளக்கமளிக்குமாறு திருவல்லிக்கேணி காவல் துறையினர் இருவருக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 10.30 முதல் 11.00 மணிக்குள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியோ அல்லது அவரது சகோதரர் அசோக்குமாரோ இதுவரை போலீஸ் முன்னிலையில் ஆஜராகவில்லை. இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் ஆஜராகாதது இந்த வழக்கின் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது. தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்ட இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு,…