சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஏ சந்திரசேகர் மேடையில் பேசியதாவது, இயக்குனர் பாலுமகேந்திரா படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் டைரக்டர் இல்லை, ஒரு கவிஞர். அவரது படங்கள் எல்லாமே கவிதையாக இருக்கும். அதில் கற்பனையே இருக்காது. நடைமுறை வாழ்க்கை இருக்கும். மென்மையான கதைகளை படமாக உருவாக்குவார். அவரது படங்களில் அந்த காலத்து உண்மையான காதல் இருக்கும். தெளிந்த நீரோடை போல அவரது படங்கள் எளிதான இருக்கும். பாலுமகேந்திராவை அதனால் மிகவும் நான் விரும்புவேன்.
அவரைப் போல இயக்குனர் வெற்றிமாறன் படங்களும் எனக்கு பிடிக்கும். ஆனால் பாலு மகேந்திராவிடம் இருந்து வந்த வெற்றிமாறன் படங்கள் அதற்கு நேர்மாறாக அதிரடியாக இருக்கின்றன. ஆனால் நடைமுறை வாழ்க்கை வெற்றிமாறன் படங்களிலும் இருக்கிறது. பாலுமகேந்திராவிடம் 15 ஆண்டுகள் இருந்தவரிடம் அவரது பாதிப்புகள் இல்லாமல் இருப்பது எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் என் மகன் விஜய் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். வெற்றிமாறனும் ஆசைப்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அது நடக்கவில்லை என்று அந்த விழாவில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசகேர் வெளிப்படையாக பேசினார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…