Categories: சினிமா

அக்கவுண்ட்ல பணமும் இல்ல; காரில் டீசலும் இல்ல.. அந்த காலேஜ்ல அசிங்கப்பட கூடாதுன்னு நெனைச்சேன்.. துயரத்தை பகிர்ந்த 96 இயக்குனர்..!!

Spread the love

பிரபல இயக்குனரான பிரேம் குமார் விஜய் சேதுபதி திரிஷா ஆகியோரை வைத்து 96 திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக கார்த்தியை வைத்து பிரேம்குமார் மெய்யழகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிரேம்குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரேம்குமார் கூறியதாவது, 96 திரைப்படத்திற்கு பிறகு நான் எந்த படத்தையும் இயக்கவில்லை. சொல்லப்போனால் 96 திரைப்படத்தில் சம்பாதித்த அனைத்து பணத்தையும் செலவழித்து விட்டேன். ஒரு கட்டத்தில் பேங்க் பேலன்ஸ் பூஜ்ஜியத்திற்கு வந்துவிட்டது. மேனேஜர் எனக்கு போன் பண்ணி பேலன்ஸ் பூஜ்ஜியத்திற்கு வந்துவிட்டது என கூறினார். அந்த கட்டத்தில் தான் லயோலா காலேஜ்ல ஒரு செமினார் அரேஞ்ச் பண்ணி இருந்தாங்க.

அதுக்கு என்ன கூப்பிட்டு இருந்தாங்க. நானும் போயிருந்தேன். ஆனா திரும்பி வரும்போது பார்த்தா கார்ல டீசல் ரிசர்வுக்கு வந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்துல கார் நின்றுவிடும். இந்த காலேஜ் கேட் தாண்டுனதுக்கு அப்புறம் கார் நின்றால் கூட பரவாயில்லை. உள்ளேயே நின்னுட்டா ரொம்ப அசிங்கமா போயிருமே அப்படின்னு நினைச்சேன். டீசல் போடறதுக்கு பேங்க்லயும் பணம் இல்ல. கைலயும் காசு இல்ல.

அந்த டைம்ல தான் கேட் தாண்டும் போது காலேஜ்ல இருந்து ஒருத்தர் வந்து என் கையில மொமெண்டோ ஒன்னு கொடுத்தாரு. அதுல ஒரு கவர் இருந்தது. காலேஜுக்கு வந்து பேசுனா பயண செலவுக்கு பணம் தருவாங்களாம். அது எனக்கு தெரியாது. கடைசில அவங்க தந்த பணத்தை வைத்து தான் காருக்கு டீசல் போட்டேன். கொஞ்ச நாள் அப்படியே இருந்தேன். அந்த டைம்ல கார்த்தி சார் கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சு. அவர்கிட்ட போய் கதை சொன்னேன். அவர் ஓகே சொல்லிட்டாரு. அப்படி தான் மெய்யழகன் படம் உருவானது என உருக்கமாக பேசியுள்ளார்.

admin

Recent Posts

தவெகவுடன் கூட்டணி இல்லை… இரவோடு இரவாக வெளியான அறிவிப்பு.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் ஜுரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)…

39 seconds ago

“ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு”… முக்கியத் துறையை குறி வைக்கும் விசிக?… விஜய்க்கு தலைக்கு மேல் கத்தி….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.…

5 minutes ago

தவெகவிற்கு ஆதரவு இல்லை… விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஆளுநர் மாளிகையில் நள்ளிரவில் நடந்த செக் மேட்….!

தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரங்கேறியுள்ள இந்த நள்ளிரவு அரசியல் நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

10 minutes ago

“அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு?”… மேடையில் உண்மையை உடைத்த சிபிஐஎம் தலைவர்… தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு….!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன்வந்ததாக சிபிஐஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி…

15 minutes ago

இன்று விஜய் பதவியேற்பு கிடையாது… காலையிலேயே ஷாக் நியூஸ்…. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பில்லை…

19 minutes ago