தஞ்சாவூர் மண்ணிலிருந்து வெறும் 85 ரூபாயுடன் சென்னைக்கு வந்து, இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் பரணி. ஆரம்ப காலங்களில் சென்னையில் தங்குவதற்கு இடமின்றி நடைபாதைகளில் உறங்கியும், டீக்கடைகளில் வேலை செய்தும் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். இசைஞானி இளையராஜா மீது கொண்ட தீராத பற்றால், எப்படியாவது அவரிடம் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கில் அவரது அலுவலகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்ந்தார். அங்கு சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியபோது, அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் முறையான இசைப் பயிற்சி இல்லாமலேயே இசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
பரணியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். நடிகர் விஜய்யின் அறிமுகத் திரைப்படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பை வழங்கிய அவர், பின்னர் ‘பெரியண்ணா’ படத்தின் மூலம் பரணியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். குணசேகரன் என்ற இவரது பெயரை ‘பரணி’ என மாற்றியதும் எஸ்.ஏ. சந்திரசேகர் தான். அந்தப் படத்தில் இடம்பெற்ற “நிலவே நிலவே” பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, பரணி என்ற இசையமைப்பாளரைத் திரையுலகிற்கு அடையாளம் காட்டியது.
இருப்பினும், பரணியின் இசைப் பயணத்தில் மைல்கல்லாக அமைந்தது ‘பார்வை ஒன்றே போதுமே’ திரைப்படம் தான். இப்படத்தில் இடம்பெற்ற “மழைத்துளி மழைத்துளி”, “திருடிய இதயத்தை”, “திரும்ப திரும்ப” போன்ற அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இன்றும் பலரது ஃபேவரிட் பிளேலிஸ்ட்டில் இந்தப் பாடல்கள் இடம்பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ‘சார்லி சாப்ளின்’, ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘பேசாத கண்ணும் பேசுமே’ என முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, 2000-களின் தொடக்கத்தில் ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்தார்.
சமீபகாலமாகத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து பரணி ‘ஃபீல்டு அவுட்’ ஆனது போன்ற தோற்றம் இருந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் காலத்தால் அழியாதவை. தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் நடைபாதையிலிருந்து கோலிவுட்டின் நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்த இவரது பயணம், சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மீண்டும் ஒருமுறை தனது அதிரடி இசையால் ரசிகர்களைக் கவரும் நம்பிக்கையுடன் பரணி தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…