#image_title
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். ஷாருக்கான் நடிப்பில் ரிலீசான ஜவான் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ஒரு படத்தில் நடிக்க ஷாருக்கான் 150 கோடி முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார். ஷாருக்கானின் சொத்து மதிப்பு 6300 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மும்பையில் ஷாருக்கானுக்கு சொந்தமாக 200 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா அமைந்துள்ளது. தினமும் ஷாருக்கானை காண ஏராளமான ரசிகர்கள் வந்து செல்கின்றனர்.
அந்த சொகுசு பங்களாவில் பல்வேறு வசதிகள் இருக்கிறது. அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஷாருக்கானின் பிரம்மாண்ட வீட்டில் இன்டீரியர் டிசைனிங் அழகாக இருக்கும். அதனை செய்தது ஷாருக்கானின் மனைவி கௌரிகாந்தான். சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2001-ஆம் ஆண்டு ஷாருக்கான் அந்த வீட்டை வாங்கி உள்ளார். அந்த வீட்டிற்கு மன்னத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள உட்புற அனைத்து வேலைப்பாடுகளையும் கௌரிகான் தனது கணவருக்காக ஆசை ஆசையாக செய்து கொடுத்துள்ளார்.
வீட்டில் இருக்கும் ஒரு அறையில் ஷாருக்கான் வாங்க அனைத்து விருதுகளும் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஷாருக்கானின் மனைவி கௌரிகான் தனது காலணிகளை அடுக்கி வைப்பதற்கும் தனியாக ஒரு அறை இருக்கிறதாம். ஷாருக்கானுக்கு பல மொழி திரைப்படங்களை பார்ப்பதற்கு ஆர்வம் அதிகம். இதனால் அவரது வீட்டில் மினி தியேட்டரையே அமைத்துள்ளார். பார்ப்பதற்கு ஆடம்பரமாக அந்த தியேட்டர் இருக்கிறது. தியேட்டரின் சுவர்கள் வெல்வட்டால் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இத்தாலிய கட்டிடக்கலை மற்றும் உலகில் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய கலை பொருட்களை ஷாருக்கான் தனது வீட்டில் உள்ள ஒரு டிராயிங் அறையில் வைத்துள்ளாராம். பார்ப்பதற்கே அந்த ட்ராயிங் அறை ராயல் லுக்கில் இருக்குமாம். சுமார் 6 மாடி கட்டிடம் கொண்ட ஷாருக்கானின் வீட்டில் லிப்ட் வசதி உள்ளது. வீட்டின் படிக்கட்டுகள் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் அலங்காரத்திற்காக ஏராளமான நாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட மரத்தால் வேலைப்பாடுகளை செய்துள்ளனர்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிரட்டலான திருப்பமாக, தவெக தலைவர் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் இழுபறி, தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை…
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகம் தனது வலிமையை இழந்து 'நீசம்' பெறுவது பொதுவாகப் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தப் பலவீனம்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்எல்ஏ காமராஜ் விவகாரம், தற்போது 'வீடியோ' ஆதாரத்தால் புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. அமமுக…