திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.5 பவுன் தங்கச் செயினைக் கண்டெடுத்து, அதனை நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருவாரூர் விளமல் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்குப் பெண்மணி ஒருவர் தனது குழந்தையுடன் சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது தாயின் இடுப்பில் இருந்த குழந்தை விளையாட்டாகக் கழுத்தில் கிடந்த தங்கச் செயினைப் பிடித்து இழுத்ததில், சுமார் 1.5 பவுன் எடை கொண்ட செயின் அறுந்து மருத்துவமனை வளாகத்தில் கீழே விழுந்துள்ளது. இதனை அந்தத் தாய் கவனிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், அங்குத் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர், தரையில் தங்கச் செயின் கிடப்பதைக் கண்டு அதனை எடுத்துள்ளார். சற்றும் தயங்காமல் அந்த நகையை எடுத்துச் சென்று மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, காவல்துறையினர் மூலமாக நகையைத் தவறவிட்ட பெண்மணியை வரவழைத்துச் செயினைப் பத்திரமாக ஒப்படைத்தனர். ஏழ்மையான நிலையிலும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளரின் செயலைப் பொதுமக்களும் நெட்டிசன்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…