தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பில்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக என்டிடிவி உள்ளிட்ட முன்னணி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை விஜய் இன்னும் நிரூபிக்காத காரணத்தினால், அவருக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு கடிதம் வழங்கியுள்ள போதிலும், தற்போதைய நிலவரப்படி அக்கட்சிக்கு 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 என்ற இலக்கை இன்னும் எட்டாததால், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்எல்ஏ காமராஜ் விவகாரம், தற்போது 'வீடியோ' ஆதாரத்தால் புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. அமமுக…
தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) முக்கிய சீனியர் தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தற்போது ஓரங்கட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமையத்…
மனிதநேயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு கொடூரமான உண்மை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லிடியா கோர்டோ என்பவரின் வாக்குமூலம் மூலம்…
நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியை எட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில், கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள்…