Categories: சினிமா

என்னை மிரட்டி என் படத்தை எழுதி வாங்கினார்கள்… எனக்கு துரோகம் செய்த நண்பன் இன்று பெரிய இயக்குனர் – நா தழுதழுக்க பேசிய மிஷ்கின்!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின்  சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மிஷ்கின் தொடர்ச்சியாக நல்ல படங்களைக் கொடுத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் சொதப்பியதும் உண்டு. தற்போது அவர் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் ரிலீஸாகாமலும், ட்ரெய்ன் படம் இறுதி கட்டத்திலும் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியது பெரியளவில் சர்ச்சைகளை உண்டாக்கியது. அந்த பேச்சில் அவர் சில கெட்டவார்த்தைகளையும், இளையராஜாவை ஒருமையிலும் பேசியது கண்டனங்களைப் பெற்றதை அடுத்து தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டார்.  அந்த மன்னிப்பின் இடையே அவர் தன்னுடைய பேச்சுக்கு  சில விளக்கங்களையும் கொடுத்தார்.

அதில் “என்னுடைய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் முதல் நாள் ரிலீஸாகவில்லை. ரிலீஸ் ஆகவிடவில்லை. அந்த படம் தியேட்டரில் பெரிதாக ஓடவில்லை. என் நண்பன் ஒருவன் அந்த படத்தை நல்ல விலைக்கு விற்றுத்தருவதாக சொல்லி என்னை அழைத்துச் சென்றான். அந்த அறையில் 20 குண்டர்கள் என்னை மிரட்டி என் படத்தை 75 லட்ச ரூபாய்க்கு வலுக்கட்டாயமாக எழுதி வாங்கினார்கள். நான் ஒரு 2 கோடி ரூபாயாவது கொடுங்கள் என்றேன்.

அவர்கள் முடியாது என்றார்கள். இன்றைக்கு அந்த படம் அந்த சேனலில் 80 முறைக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. என்னை ஏமாற்றிய என் நண்பன் இப்போது ஒரு பெரிய இயக்குனராக இருக்கிறான். என்னை மிரட்டியவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டார்கள். நான் அவர்கள் கொடுத்த செக்கைக் கிழித்துப் போட்டுவிட்டு அவர்களிடம் சொன்னேன் “நான் சென்னைக்கு வரும் போது ஒரு பேப்பரும் பேனாவும்தான் எடுத்து வந்தேன். இப்போதும் என்னால் முன்னேறி வரமுடியும் என்று. அதன்பின்னர் இன்று உங்கள் முன் இந்த மேடையில் பேசிக் கொண்டிருக்கிறேன்” என உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

9 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

16 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

22 minutes ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

33 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

44 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

53 minutes ago