Connect with us

CINEMA

இனி படத்திற்கு Bye Bye.. அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிரேமம் பட இயக்குனர்.. அவரே வெளியிட்ட பதிவு..!!

தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நடித்தனர். முதல் படத்திலேயே அல்போன்ஸ் புத்திரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அல்போன்ஸ் இயக்கிய பிரேமம் திரைப்படம் மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

   

அதன் பிறகு அல்போன்ஸ் 7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்தார். இதனையடுத்து பிரித்திவிராஜ் நயன்தாரா நடிப்பில் கோல்டு என்ற படத்தினை இயக்கினார். அந்தப் படம் வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தமிழில் அல்போன்ஸ் புத்திரன் கிப்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் ஹீரோவாகவும், அவருடன் கோவை சரளா, சம்பத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் இனி திரையரங்குகளுக்கான படங்களை இயக்க மாட்டேன் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் எனப்படும் அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நான் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை.

இதனால் எனது சினிமா பயணத்தில் இருந்து விலகுகிறேன். நான் பாடல், வீடியோக்கள், குறும்படங்கள், ஓடிடிக்கான படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து இயக்குவேன். சினிமாவை விட்டு விலக விருப்பமில்லை. ஆனால் வேறு வழி எனக்கு இல்லை. மோசமான உடல்நிலையும், எதிர்பார்க்க முடியாத வாழ்க்கையும் இருந்தால் இப்படித்தான் இன்டர்வெல் பஞ்ச் போல டுவிஸ்ட் இருக்கும் என பதிவிட்டு இருக்கிறார்.

அல்போன்ஸ் குறிப்பிட்ட ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் என்பது மூளை சம்பந்தமான அரிய வகை நோய். இதனை குணப்படுத்துவதற்கு இன்று வரை வழி தெரியவில்லை. இந்த பதிவை போட்ட சில மணி நேரங்களிலேயே அல்போன்ஸ் அதனை நீக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top