விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மைசூரில், மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய இவர் கன்னட சேனல் ஒன்றில் கிருஷ்ணா துளசி என்கின்ற சீரியல் மூலமாக அறிமுகமானார்.

அந்த சீரியல் மிகப்பெரும் அளவில் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாக்லேட் என்கின்ற சீரியலிலும் நடித்து வந்தார்.\

கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் தொலைகாட்சியில் தொடங்கப்பட்ட காற்றுக்கென்ன வேலி என்ற தொடரின் நடித்திருந்தார்.

இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சீரியலில் மட்டும் தான் குடும்ப பாங்காக நடித்து வருகிறார் . ஆனால் நிஜத்தில் அம்முனி படு கிளாமர்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான உடைகளில் போட்டோ சூட் எடுப்பார்.

அந்த வகையில் தற்போது குட்டை கவுனில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
