Connect with us

INSPIRATION

அன்று : வறுமையில் இருந்த பார்பர் ; இன்று : 400 சொகுசு கார்கள் கொண்ட பணக்காரர்…. யார் இந்த ரமேஷ் பாபு

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற தீ நம் மனதிற்குள் எரிந்து கொண்டு இருந்தால், அது நம் வாழ்க்மகயில் நிச்சயம் ஒரு ஒளியை கொடுக்கும் என்பார்கள். ஒருவர் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் பொறுமையும், கடின உழைப்பும் அவசியம். கடினமான பாதையில் பயணித்தாலும் குறிக்கோளில் இருந்து பின்வாங்காமல் இருந்தால் நிச்சயம் அதை சாதிக்கலாம் என்பது நூறுக்கு நூறு உண்மை.

அப்படி ஒரு வெற்றியாளர் தான் ரமேஷ் பாபு. பார்பராக இருந்து இன்று 400 சொகுசு கார்கள் வைத்திருக்கும் பணக்காரர் என்றால் நம்ப முடிகிறதா ? உண்மை தான் அவரை பற்றி இந்த பதிவில் காணலாம்.

   

Billionaire barber ramesh babu

ரமேஷ் பாபுவின் தந்தை முடி வெட்டும் ஒரு பார்பர். அவர் இறந்தஒய்ன் வறுமையின் உச்சத்திற்கு சென்று விட்டது இவரின் குடும்பம். ரமேஷின் தாயார் வீடு வீடாக சென்று வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றினார். மூன்று வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டனர். ரமேஷும் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் குடும்பத்தை காப்பாற்ற கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.

தந்தையின் தொழிலையே பாப்போம் என சலூனில் இரவு பகலாக வேலை செய்து சம்பாரிக்க தொடங்கினார். பின்னர் தன் கடையை அழகான சலூனாக மாற்றி அதன் மூலம் பல கஷ்டமர்களை ஈர்க்க தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த பணத்தை சேமித்து, மாருதி ஆம்னி வேனை வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்தார். அந்த பிசினஸ் படு வேகமாக வளர்ந்து இவரை கார் வாடகை கம்பெனியை துவங்க வைத்தது.

Billionaire barber ramesh babu car collection

இதன் மூலம் பணக்காரராக உயர்ந்தார் ரமேஷ் பாபு. அதன்பின் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்.டபுள்யூ, என பல விலையுர்ந்தஹ் கற்க;ளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதன்பின் தன் பிசினஸை விரிவுபடுத்த எண்ணிய ரமேஷ், ரமேஷ் டூர்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்தார்.

The billionaire barbar

என்னதான் இவ்வளவு பெரிய பணக்காரராக மாறினாலும், தான் எங்கிருந்து வந்தோம் என்பதை மறக்காதவர் ரமேஷ் பாபு, இன்று தன் பழைய சலூனுக்கு சென்று அங்கு வருவோருக்கு ஆசையாக முடிவெட்டி விடுவாராம் ரமேஷ் பாபு. இவரின் பண்பு தான் இவரை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

author avatar
Deepika
Continue Reading

More in INSPIRATION

To Top