Connect with us

CINEMA

கொடைக்கானலில் உள்ள சாத்தான்களின் சமையலறை ; மறைக்கப்பட்ட உண்மைகள்

மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்துக்கு பின் குணா படம் மீண்டும் பேமஸ் ஆனது. ஆனால் குணா படத்தினால் ஒரு குகையே அதன் பெயரை பெற்றது. கொடைக்கானலில் உள்ள ஒரு குகையில் குணா படத்தை படமாக்கினர், அதன்பின் அந்த குகை, குணா குகை என பெயர் பெற்றது. ஆனால் அதன் உண்மையான பெயர், சாத்தானின் சமையலறை.

Pandavas in cave

   

கேக்கவே விசித்திரமாக இருக்கிறது அல்லவா ? மகாபாரத கதையில் வாரணவாதம் தீக்கு இறையாக்கப்பட்டது, அப்போது பாண்டவர்கள் குந்தியுடன் அங்கிருந்து தப்பி வனத்தில் சிறிது காலம் வாழ்ந்தனர். அந்த சமயத்தில் இந்த குகையில் தங்கி சமைத்து சாப்பிட்டதாக வரலாறு சொல்கிறது. அது சரி, அது என்ன சாத்தானின் சமையலறை ? இந்த பதிவில் காண்போம்.

Guna movie cave

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மிகப்பெரிய டூரிஸ்ட் இடமாக உள்ளது. பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை என பல இடடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு தாராளமாக சென்று சுற்றி பார்க்கலாம். ஆனால் குணா குகைக்கு மட்டும் நமக்கு அனுமதி கிடையாது. கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆங்கிலேயேர் காலத்தில் சாத்தானின் சமையலறை என அழைக்கப்பட்ட பகுதி, பின்னாளில் அப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட ‘குணா’ என்ற கமல்ஹாசன் நடித்த திரைப்படத்திற்கு பிறகு குணா குகை என்று அழைக்கப்பட்டது.

Guna cave

இப்பகுதி, 1821-ம் ஆண்டு அமெரிக்கரான பி.எஸ்.வார்டு என்பவரால் கண்டறியப்பட்டது. பாறைகளுக்கிடையே பிளவு அதன் வழியாக சென்றால் இருண்ட குகைப் பகுதி, அதில் வாழும் ராட்சத வவ்வால்களின் சத்தம், ஆங்காங்கே குகைக்குள் ஊடுருவும் ஒளி என திகிலூட்டும் வகையில் இருந்ததால் இந்த பகுதியை ‘சாத்தானின் சமையலறை’ என நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கொடைக்கானலில் வசித்த ஆங்கிலேயேர்கள் அழைத்து வந்தனர்.

Guna cave

பின்னாளில் குணா படத்தினால் இந்த பகுதி குணா குகை என அழைக்கப்பட்டு மக்களை அதிகம் கவர்ந்தது. இளைஞர்கள் இந்த குகைப் பகுதிக்குச் சென்றுவர அதிக ஆர்வம் காட்டியதின் விளைவு அடுத்தடுத்து குகைக்குள் விழுந்து இளைஞர்கள் பலர் உயிரிழக்க துவங்கினர். விழுந்தவர்களின் உடலை இருண்ட குகைப்பகுதிக்குள் இறங்கி கண்டெடுக்கமுடியாதநிலை ஏற்பட்டது. இந்த குகை பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து கடந்த 2012-ம் ஆண்டு இரும்புக் கம்பிகள் மூலம் குகை பகுதியை வனத்துறையினர் மூடினர். கிரில் கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு தூரத்தில் இருந்து பார்க்கும் வசதியை ஏற்படுத்தினர்.

ஆனால் இந்த குகைக்குள் சாத்தான் இருப்பதாகவும், அதுவே அங்கு இருப்பவர்களை பழிவாங்குவதாகவும் கூறுகின்றனர். அதனால் தான் இது சாத்தானின் குகை என பெயர்பெற்றது என்றும் கூட பலர் கூறுகின்றனர்.

 

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top