விவாகரத்தால் என் குடும்பம் தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. மனைவியை பிரிந்தது ஏன்..? முதன் முறையாக மனம் திறந்த விஜய் யேசுதாஸ்..!

By Mahalakshmi on மே 10, 2024

Spread the love

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வரும் யேசுதாஸ் அவர்களின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் தமிழ் சினிமாவில் தனது காந்தக் குரலால் பல பாடல்களை பாடி இருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் மாரி திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார். தந்தையைப் போலவே பல பின்னணி பாடல்களை பாடி பிஸியான பாடகராக வலம் வருகிறார் விஜய் யேசுதாஸ்.

   

இவர் ஐந்து ஆண்டுகளாக தர்ஷனா என்பவரை காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விவாகரத்துக்கு பல காரணங்கள் தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது.

   

 

 

பிரபல நடிகர் ஒருவருடன் ஏசுதாஸின் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்த காரணத்தினால் தான் பிரிந்து விட்டார்கள் என்று பல காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றார் விஜய் யேசுதாஸ். அதில் அவர் தெரிவித்திருந்தாவது “நாங்கள் பிரிந்தது மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிக அளவு பாதிக்கப்பட்டனர்.

என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த விவாகரத்தால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தாண்டி அதிகம் பொறுப்புள்ளவனாக மாறி இருக்கிறேன். என் குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு அதிகரித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் விவாகரத்து காரணமாக நான் சோகத்தில் இருக்கிறேனா? சந்தோசமாக இருக்கிறேனா என்று கேட்டால் சோகத்தில் இருப்பதற்கு எனக்கு நேரமில்லை.

வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியிருந்தார். இன்றைய சூழலில் பல நடிகர்கள் நடிகைகள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஒரு சில காரணங்களினால் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லை என்பது தான். அப்படித்தான் பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்களும் விவாகரத்து பெற்று பிரிந்து இருக்கிறார்கள்.