படுத்து கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய தமன்னா.. 7 நாளில் மட்டும் அரண்மனை 4 செய்த வசூல்..!

By Mahalakshmi on வைகாசி 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3-ம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில் அரண்மனை 4 திரைப்படம் தமிழ் சினிமா பெயரை கொஞ்சம் காப்பாற்றியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் ஒரு வாரம் அரண்மனை 4 திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. 90களில் தமிழ் சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய சுந்தர் சி. 30 வருடங்களாக பல கமர்சியல் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இவரது திரைப்படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற வகையில் இருக்கும்.

   

   

இயக்கம் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த சுந்தர் சி ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்த அசத்தியிருக்கின்றார். அரண்மனை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து அரண்மனை படத்தின் சீரியஸ்களை இயக்க தொடங்கிய சுந்தர் சி இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை இயக்கினார். இந்த இரண்டு பாகங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

 

அடுத்த சீரியஸை கட்டாயம் வெற்றி படமாக மாற்றுவேன் என்று சவால் விட்டிருந்த நிலையில் சொன்னபடி செய்து காட்டி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சுந்தர்சி நடித்திருக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தில் தமன்னாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ராசி கண்ணா, யோகி பாபு என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் முதல் நாளில் 4.65 கோடி வசூலும், இரண்டாவது நாளில் 6.65 கோடி வசூலும், மூன்றாவது நாளில் 7.85 கோடி வசூலும் செய்திருந்தது. மொத்தம் ஏழு நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 50 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.