Connect with us

CINEMA

உண்மையில் ஜெயிலர் வசூலை முறியடித்ததா லியோ..? வெளியான கலக்ஷன் ரிப்போர்ட்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர்  19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம்,  தளபதி விஜய்யின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்துள்ளது.

   

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தன. இறுதி வரை படம் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா? என்கிற சிக்கல் நிலவி வந்தது. ஆனாலும் அனைத்து பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் ரிலீசான முதல் நாளே  உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்ததன் மூலமாக தளபதி என்றும் மாஸ் தளபதி தான் என்பதை நிரூபித்தது.

இதைத்தொடர்ந்து லியோ கண்டிப்பாக ஜெயிலர் மொத்த வசூலையும் முறியடித்துவிடும் என்று தளபதி ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தனர். இந்நிலையில் தற்பொழுது இதுபற்றிய முழுமையான விவரங்கள் கிடைத்து சண்டைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த வசூலை விட லியோ திரைப்படத்தின் மொத்த வசூல் குறைவு தான் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜெயிலர் ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. ஆனால், லியோ இதுவரை ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 597 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ. 600 கோடியை வேண்டுமானால் தொடலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் 35 கோடி வித்தியாசத்தில் லியோ-வை ஜெயிலர் தோற்கடித்துள்ளது. எனினும் தமிழ்நாட்டில் லியோ படம் ரூ. 218 கோடி வரை வசூல் செய்து ஜெயிலர் படத்தின் வசூலை தமிழ்நாட்டில் முறியடித்துள்ளது.

அதே போல் வட இந்தியாவிலும் ஜெயிலர் படத்தை விட லியோ படத்தின் வசூல் தான் அதிகம் என கூறப்படுகிறது.  அத்துடன் ஜெயிலர் வசூல் தமிழ்நாட்டில் – ரூ. 205 கோடி என்றும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்  – ரூ. 88 கோடி என்றும், கேரளாவில் – ரூ. 58.50 கோடி என்றும், கர்நாடகாவில் – ரூ. 71. 50 கோடி, Rest Of India – ரூ. 17 கோடி என்றும், வெளிநாட்டில் – ரூ. 195 கோடி என்றும் மொத்தமாக ரூ. 635 கோடி உலக அளவில் வசூல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் லியோ வசூல் தமிழ்நாட்டில் ரூ. 218 கோடி என்றும், கேரளாவில் – ரூ. 59 கோடி என்றும், கர்நாடகாவில் – ரூ.40 கோடி என்றும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்  ரூ. 47 கோடி என்றும்,  Rest Of India – ரூ. 35 கோடி என்றும், வெளிநாட்டில் – ரூ. 198 கோடி என்றும்,  மொத்தத்தில் ரூ. 597 கோடி உலக அளவில் தற்பொழுது வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் லியோ ஜெயிலரின் வசூலை முந்தவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Continue Reading

More in CINEMA

To Top