அதிமுகவின் தொடர் தோல்விகள் மற்றும் அக்கட்சியின் உட்கட்சி பூசல்கள் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர் படுதோல்விகளைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2019ஆம் ஆண்டு முதல் நடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் கட்சிக்கு ஏற்பட்ட சரிவை சுட்டிக்காட்டினார். நாளுக்கு நாள் சரிந்து வரும் அதிமுகவின் வாக்கு வங்கி, இயக்கத்தின் எதிர்காலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தாங்கள் விடுத்த கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதே, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்று இபிஎஸ்ஸிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். ஆனால், கட்சி ஒன்றிணைவதை இபிஎஸ் மறுத்ததோடு, உண்மையான தோல்விக்கான காரணங்களை விவாதிக்காமல் மாவட்ட வாரியாகக் கூட்டங்களை நடத்தி உண்மைகளை திசைதிருப்பினார் என்றும் அவர் சாடினார்.
கூட்டணி விவகாரங்களிலும் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டதாக சி.வி.சண்முகம் உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது நிதர்சனம் என்றும், ஆனால் தவெக நிர்வாகிகளை இபிஎஸ் திட்டமிட்டே உதாசீனப்படுத்தி வெளியேற்றினார் என்றும் கூறினார். இதேபோல், தேமுதிகவை ‘அரை பர்சென்ட் கட்சி’ எனப் பேசி அவர்களை திமுக கூட்டணிக்குச் செல்ல வைத்தார் என்றும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் உதாசீனப்படுத்தி வலிமையான கூட்டணி அமையாமல் தடுத்தார் என்றும் அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
கட்சியின் நலனுக்காகத் தொண்டனாக இருக்கச் சம்மதித்து, மனம் திருந்தி வரத் தயாராக இருந்த ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரையும் இபிஎஸ் சேர்க்க மறுத்துவிட்டார் என்று சி.வி.சண்முகம் சாடினார். பிரிந்து சென்றவர்களை அன்றே சேர்த்திருந்தால் இன்று அதிமுக ஆட்சி அமைந்திருக்கும் அல்லது அக்கட்சியின் கண்ணசைவில் ஆட்சி அமைந்திருக்கும் சூழல் இருந்திருக்கும் என்றார். தற்போது தனது பதவிக்கு ஆபத்து வரும் என்றதும், “நீக்கப்பட்டவர்கள் திருந்தி வர சந்தர்ப்பம் கொடுப்பதாக” இபிஎஸ் நாடகமாடுகிறார் என்று குறிப்பிட்ட அவர், “இவர் தலைமையில் நாம் எங்கே வெற்றியைப் பார்த்தோம், தோல்விகளைத் தானே சந்தித்து வருகிறோம்” என இபிஎஸ்ஸை கடுமையாகச் சாடியுள்ளார்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…