“என்ன சாதி.. நீ செத்தால் சாவு”…. அலட்சியம் காட்டிய போலீஸ்…. 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன் தாய் செய்த அதிர்ச்சி செயல்…. கடலூரில் பதற்றம்….!

Spread the love

குடும்ப பிரச்சினை காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வசந்தாமணி என்பவருக்குத் திருமணம் முடிந்த நிலையில், அவரது கணவர் தனக்குத் திருமணமாகவில்லை என்று கூறி ஏமாற்றியதுடன், தற்போது முதல் மனைவியுடன் சென்றுவிட்டார். பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக நீதிமன்றத்தை நாடியும் எந்தப் பலனும் கிடைக்காததால், கடலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம், பரங்கிப்பேட்டை மற்றும் ஜெயங்கொண்டம் காவல் நிலையங்களில் அவர் தொடர்ந்து புகார் அளித்துள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இருமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

காவல் துறையினரின் அலட்சியத்தால் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளான வசந்தாமணி, தான் சந்தித்து வரும் கொடுமைகளைக் கண்ணீர் மல்க விவரித்தார். வாழ்வதற்கு வீடும் இன்றி, சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் அரசின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் உணவை நம்பியே தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். மேலும், காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றபோது, அவரது சாதியின் பெயரை குறிப்பிட்டுப் புகாரைப் பெற மறுத்ததாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியதற்கு “நீ செத்தால் சாவு” என மிகக் கொடூரமாகப் பதிலளித்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். அதிகாரிகளின் இந்த மனசாட்சியற்ற போக்கு அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களாகப் போராடியும் எந்த நீதியும் கிடைக்காததால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், வேறு வழியின்றி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தனது இரண்டு குழந்தைகளுடன் திடீரென பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றினர். அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதியும் ஒரு தாயை தன் குழந்தைகளுடன் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளிய இந்தச் சம்பவம் கடலூரில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

55 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

1 மணத்தியாலம் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago