ஆசை ஆசையாய் காதல் திருமணம்… நொடி பொழுதில் நடந்த விபத்து… பரிதவிக்கும் இரட்டை குழந்தைகள்… சென்னை ஆவடியில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

சென்னை ஆவடி, கார் மோதி இழுத்துச் செல்லப்பட்டு கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு பள்ளிக்குப்பம், சேர்ந்த அறிவரசன் (41) இவர் அதே பகுதியில் தனியார் கால்சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். மனைவி சரண்யா (36), திருவள்ளூரில்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர்  தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.

அறிவழகன் மற்றும் சரண்யா இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆவடி- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார் திடீரென்று மோதி இருவரையும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி கார் சாலை சுவற்றில் மோதி கவிந்தது. அருகில் இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  அறிவரசன் மற்றும் சரண்யாவின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய அரசு மருத்துவர் பாரிமார்க்ஸ் என்பவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இறந்த தம்பதிகளை பற்றி அங்கு இருந்த சில நபர்களிடம் போலீசார் விசாரித்தனர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளது. தாய், தந்தை இருவருமே உயிரிழந்ததால் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படும் என்று தெரியவில்லை. நினைக்கும் போதே மனது வலிக்கிறது என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Divyamayakannan

Recent Posts

தளபதியின் அமைச்சரவை பட்டியல் ரெடி… புஸ்ஸி ஆனந்த் முதல் செங்கோட்டையன் வரை.. யார் யாருக்கு என்ன பதவி..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார்…

1 minute ago

“இவனுகளை சும்மா விடாதீங்க” ஓடும் ரயிலில் இருக்கைகளை கிழித்து அட்டூழியம்.. ரயில்வே உங்க அப்பா வீட்டு சொத்தா.? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், ஓடும் ரயிலில் பயணம் செய்த சில இளைஞர்கள் ரயிலின் இருக்கை உறைகளை…

5 minutes ago

“கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல” விஜய்க்குச் செக் வைத்த மக்கள்… தவெக-விற்குத் திருமாவளவன் கொடுத்த ஷாக்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விசிக…

5 minutes ago

“விஜய் அழைத்தால் தயார்” கூட்டணி ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா கம்யூனிஸ்டு கட்சிகள்…? தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு…

12 minutes ago

BREAKING: சற்றுமுன் அதிகாரபூர்வமாக நீக்கினார் ஸ்டாலின்… தமிழக அரசியலில் அடுத்த அதிரடி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

18 minutes ago

நீட் தேர்வு மையத்தில் பரபரப்பு..! மகளிடம் அதை கழற்றச் சொன்ன அதிகாரிகள் .. ஆவேசமடைந்த தந்தை.. வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான…

19 minutes ago