குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான ‘துளசி மாலையை’ (கண்டி மாலை) அகற்றுமாறு அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டார். பாதுகாப்புச் சோதனையின் ஒரு பகுதியாக மாலை அகற்றப்பட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தியதால், அந்த மாணவியின் தந்தை கடும் ஆத்திரமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மாணவியின் தந்தை “நான் இந்துவின் மகன், நான் சூரத்தில் நிற்கிறேன், பாகிஸ்தானில் அல்ல” என்று ஆவேசமாகக் கத்துவதைக் காண முடிகிறது. ஹிஜாப் போன்ற மற்ற மத அடையாளங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, துளசி மாலைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். அந்த மாணவி தனது தந்தை ஆவேசப்படுவதைக் கண்டு வருத்தமடைந்து, “நேரமாகிறது, பரவாயில்லை” என்று கூறி மாலையை அகற்ற முற்பட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இறுதியில் சில போராட்டங்களுக்குப் பிறகு அந்த மாணவி மாலையுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை , மத ரீதியான அடையாளங்களை அகற்றுமாறு கூறுவது தவறு என்றும், இது தங்களது வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் மத அடையாளங்களை அணிய அனுமதி உண்டு என ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தேர்வு மைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று NTA உறுதி அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…